1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 10. மார்கழி குளிர்
 11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 29. மகா கவி பாரதியார்
 30. அமராவதி அணை
 31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 32. உடுமலை நாராயணன் கவி
 33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 35. உடுமலைப்பேட்டை வரலாறு
 36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 38. கிராமத்து திண்ணை பேச்சு
 39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019

இப்போது நமது கிராமத்து உறவுகளெல்லாம் ஃபேஸ்புக்,வாட்ஸஅப்ப்  வாயிலாக; திண்ணைப் பேச்சின் புதிய வடிவம். ஆனால், இது ஒரு போதை தரும் திண்ணை. அதன் வலையில் விழுந்தவர்களுக்கு அதன் முகத்தில் விழித்தால்தான் அன்றைய தினம் நகரும். அது ஒரு இலவச சாளரம்………

பெரியவர்கள்

முன்பு வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் இழுத்து வைத்துப் பேச. அவர்களும் காணாமல் போனார்கள். அவர்கள் இல்லாமல் போனதில் கதைசொல்ல இப்போது எவருமில்லை……இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் பேச்சுக்காக ஏங்கப்போகிறோம் நாம்.திண்ணைகள் சொல்லும் ஆயிரம் நிஜ கதைகள் …இனி திரும்ப வரா  நினைவுகள் — in தளி ஜல்லிபட்டி.

கிராமத்து வீடுகளில் திண்ணையில்லா  வீடு தேடினாலும் கிடைக்காது
பெரிய திண்ணை, சின்ன திண்ணை ஒட்டுத் திண்ணை.
பெரிய மருது, சின்ன மருதுவாய் மகுடம் தரிக்காத மகாராஜாக்கள்
ஆண்டு சரித்திரம் படைத்தவை;

ஒன்றா இரண்டா? எடுத்துச் சொல்ல மாளாது;
வெற்றிலைப் பெட்டியும், வெங்கலக்கூஜாவுமாக
திண்ணையில் உட்கார்ந்து வயல்வரப்பு, மடவாய்ச்சண்டை,
அண்ணன் தம்பி குடும்பச் சண்டை பாகப்பிரிவினை, பண்ணை ஆட்களுக்கு
பஞ்சாயத்து, கோர்ட்டுக்குப் போகாம காசு வாங்காத நியாயமான கட்டப்
பஞ்சாயத்து நடக்கும்; பிள்ளைகள் நிறைந்து ஒரு திண்ணை,
பள்ளிக்கூடமாய் ஆகிவிடும்; சினா மாமாவீட்டுத் திண்ணையிலே
தினம் தினம் நடக்கும் சிட்டுக்கச்சேரி சாயங்காலம் வரைக்கும் ஓயாது.

குருக்கள் வீட்டுத் “திண்ணையிலே விபூதி மந்திரிக்க,
தாயத்து, குறிகேட்க வரும் கூட்டம்,

தெருக்குழந்தைகளுடன், கட்டம், சோழி பல்லாங்குழி, கல்லாங்காய்,
புளியங்கொட்டை ஆட்டம் ஆடும் சங்கரி அத்தை திண்ணை, நாட்டுச்சேதி, வீட்டுச்சேதி
அரசியல் சேதி, அக்குவேறு ஆனி வேறாக அலச தெருவே கூடும், நியூஸ்பேப்பர்
மாமா வீட்டுத் திண்ணை.

வீட்டுப் பசங்க ராத்திரி, திண்ணையிலே படுக்கிறேன்.
காத்துவரலே” “உள்ளே எனச் சொல்லி, தலையணைமேலே வைத்துவிட்டு
இரண்டாம் பிளே சினிமாவுக்குப்போக உதவிய திண்ணை.
காற்றாட உட்கார்ந்து களிப்பும் சிரிப்புமா இயற்கைக்காற்றை
அணு அணுவா ரசித்து, மகிழ்ந்திருந்த திண்ணை.

அத்தனையும் விட்டுவிட்டு நாம் பட்டணத்துப்
பகட்டுக்கு ஆசைப்பட்டு ஓடிவந்து, அலங்காரமாய் நிற்கும்
அடுக்குமாடிக் கட்டடங்களில் மூடிப்போட்ட ஜாடியாய்
அடைபட்டு மூச்சு முட்ட சாத்திய கதவுக்குள், காற்றை காசு
கொடுத்து ஃபேன், ஏஸி என வாங்கி கரண்ட் போய், வியர்வை வெள்ளத்தில்
மூழ்கி, சோபாவில் உட்கார்ந்தால், ஐயகோ! கூர்முள்ளாய்க்
குத்துது, குஷன் வைத்தசோபா!

கிராமத்துத் திண்ணை நினைவுகளில் அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;
இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா? கிடைக்குமா?

SOURCE : https://www.facebook.com/VetriyurVillage/

Tags: , ,

Related Article

Follow us

Newsletter

Archives