1. பொள்ளாச்சி ஆழியாறு அருகே உள்ள சுற்றுலா தளங்கள்
 2. வீட்டு முறையில் ஆரோக்கியமான மூலிகைப் பொடிகள் தயாரிப்பு மற்றும் அதன் பயன்கள்
 3. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 4. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 5. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 6. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 7. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 8. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 9. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 10. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 11. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 12. மார்கழி குளிர்
 13. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 14. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 15. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 16. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 17. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 18. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 19. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 20. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 21. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 22. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 23. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 24. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 25. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 26. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 27. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 28. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 29. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 30. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 31. மகா கவி பாரதியார்
 32. அமராவதி அணை
 33. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 34. உடுமலை நாராயணன் கவி
 35. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 36. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 37. உடுமலைப்பேட்டை வரலாறு
 38. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 39. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 40. கிராமத்து திண்ணை பேச்சு
 41. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 42. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Sunday, April 21, 2019
 1. பொள்ளாச்சி ஆழியாறு அருகே உள்ள சுற்றுலா தளங்கள்
 2. வீட்டு முறையில் ஆரோக்கியமான மூலிகைப் பொடிகள் தயாரிப்பு மற்றும் அதன் பயன்கள்
 3. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 4. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 5. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 6. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 7. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 8. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 9. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 10. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 11. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 12. மார்கழி குளிர்
 13. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 14. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 15. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 16. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 17. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 18. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 19. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 20. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 21. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 22. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 23. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 24. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 25. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 26. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 27. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 28. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 29. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 30. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 31. மகா கவி பாரதியார்
 32. அமராவதி அணை
 33. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 34. உடுமலை நாராயணன் கவி
 35. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 36. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 37. உடுமலைப்பேட்டை வரலாறு
 38. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 39. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 40. கிராமத்து திண்ணை பேச்சு
 41. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 42. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
பல நாள் ஆசையை நிறைவேத்த திருச்சூருக்கு ரயில்பயணம் என்னுடைன் சுற்றும் எலியுடன்
எலி ஒன்று கைதொலைபேசியில் அழைத்து கேட்டது திருச்சூருக்கு போக வேண்டும் வருகிறாய என்று ஆமாம் வருகிறேன் என்றது எனது அடங்காத வாய் .
இருக்கும் வேலையை பார்க்கமால் வெளியூர் சுத்த முசுவு  .  கொடுத்துவிட்டேன் கண்டிப்பாக போகவேண்டும் என மணதில் ஆனால் திட்டம் பல சொதப்பல்களை அதிகமாக பண்ணும் இந்த எலிக்கு (யாசர்) . எனக்கோ பல நேரங்களில்  சந்தேகம் வழக்கம் போல்  வடக்குபட்டி ராமசாமி தான என

இரவு ரயில் பயணம் மேற்கொண்டு செல்லலாம் என்றேன் காலையில் பொள்ளாச்சி பேருந்துநிலையத்தில் திருச்சூருக்கு அதிக பேருந்து இருக்கும் என்றார் எலியின் தந்தை.

சரி என்று காலையும் விடிந்தது உடுமலையில் எனக்கு எனது பேக்கை தோலில்போட்டு நடந்தேன் ஒரு கச்சை விட்டுபோனது . சரி டா இனி ஆரம்பம் சூப்பர் . என்று உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் தொடர்ந்தேன் சன்னல் ஓர பயணத்தை காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு . மச்சா எனக்கு ஒரு காது கொடு என கேட்டான் . இதுக்கு தான் வரானுக போல .

பொள்ளாச்சி பேருந்து நிலையம் : 

அரசு விரைவு பேருந்து மிக விரைவில் பொள்ளாச்சியை வந்துஅடைந்தது , அடங்கப்பா சாமி எந்த ஊரு டிரைவர் கன்னு நீ.

இறங்கிய உடன் பசி  எடுக்க எங்கே கடை என.ன நான் அவனோ எங்கே பேருந்து திருச்சூருக்கு .

திருச்சூருக்கு 8 மணிக்கு வண்டி வரும் என்றார் ஒரு நடத்துனர் .

சரி அதுவரைக்கு ஒரு டீ சாப்பிட .
சட்டுவத்தால் எண்ணெய்யில் இருந்து பாத்திரத்தில் போட்டார் சூடான உளுந்து வடைகளை . அட ரெண்டு எடு என மூன்றாக்கி இறுதியில் நான்கில் தான் முடித்தேன் .

வழியில் சப்பாத்தி அருமையாக நெய் மற்றும் கரும்புசர்க்கரை போட்டு வைத்து சுருட்டி அப்படியே ஒரு வாய் திண்ணால் , அட டே . இது போதும் எனக்கு .
நாங்கள் வந்த வண்டி தனியார் என்பதால் உண்மையிலேயே வேகம்தான் நினைத்த நேரத்தில் கொண்டுவந்த விட்டான் .

பேருந்து பயணம் : 

காலையில் சாப்பிட்டு விட்டு பேருந்தில் ஏறி  ஐன்னல் ஓரம் அடம்பிடித்து உட்கார்ந்து பயணத்தை தொடங்கினேன்  . கேரளாவில் பெண்களின் அதிகம் என்பதை பேருத்தின் கூட்டதிலும் , கல்வி சதவிகிதத்தில் அதிகம் பெறுவதை
பெண்களின் கூட்டத்தில் இருக்கும் மாணவிகளை கொண்டு அறிந்தேன் .
பயணம் செய்யும் போது பல மாணவிகளின் கூட்டம் பேருந்தில் நிரம்பி இருந்தது அதில் இரு கண்களுக்கு மை பூசிய சேர நாட்டு பெண் குழந்தை ஒன்று தொலில் சுமக்கும் இந்த கல்வி சுமையை சிறிது நேரத்திற்கு நீங்கள் வைத்திருங்க முடியுமா என்றான் அந்த தங்கை .
கொடு பாப்பா நான் வைத்து கொள்கிறேன் என்று மற்ற பெண்கள் முன் வழியாமல் பொருப்பாக வாங்கிகொண்டேன்.
சேரநாட்டு இயற்கை வளம் பொறுமை கொள்ளும் வகையில் பச்சை வண்ணதையும் பல வயல்களையும் , எத்தனை முறை கேட்டாலும் கொடுக்க முடியாது என உரிமையுடன் கூறி வைத்திருக்கும் நீரும் ஓட கண்டேன்.

 

திருச்சூர் : 

பேருந்து நிலையத்தில் இறங்கி நாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு வழி கேட்டு பேருந்தில் ஏறினோம்
பேருந்தில் ஏறிய உடனே
மோகன்லால் நடித்த
அறியாதே அறியாதே
என ஒரு மலையாள பாடல் பாடிக்கொண்டு இருக்க எனக்கோ மிக்க மகிழ்ச்சி .
வா இந்த பேருந்தில் செல்லலாம் என்றான் .

அவனோ கொஞ்சம் சும்மா இரு இந்த வண்டி போகுமா போகாதோ என சந்தேகம்.
எப்படியோ ஏறி வந்து விட்டோம் .இறங்கியபின் தான் தெரிந்தது 2கிமீ கூட வராது தொலைவிற்கு 8 ரூபாய் பயணச்சீட்டு எடுத்தோம் என்பது .

யாசர் தேர்வு எழுத வேண்டிய இடம் கண்டபின் பள்ளிவாசல் தேடி தொழுத பின் தேர்வு எழுத சென்றான் .

12 மணி முதல் 5 மணி வரை நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எனது பல நாட்களாக மலையாள திரைப்படம் ஒன்றை கேரளமக்களோடு பார்க்க திரையரங்கம் தேடி சென்றேன் .

ராமதாஸ் திரையரங்கம்
வழிகேட்டு 1கிமீ என்றார் ,நான் நடந்து சென்றேன் இறுதியில் ஒருவரிடம் வழிகேக்க அவர் கூறிய பின்புதான் தெரிந்தது நான் அதனை தாண்டி வந்து விட்டேன் என்று .
ராமதாஸ் திரையரங்கம் சென்றேன்
 12 ,3,6,12 ஆகிய நேரங்களில் காட்சிகள் என்று போஸ்டரில் இருந்தது .
நான் இருந்த போது நேரம் 12.45 மணி சரி அடுத்த காட்சிக்கு போகலாம் என்று நினைத்து ஒருவரிடம் தமிழில் கேட்டேன் .
 2.30 கதவு திறப்பார்கள் என்றார் ஒரு செருப்புதைக்கும் உழைப்பாளி அங்கு அவருடன் உட்கார்ந்து நேரம் போக்கினேன் . அவர் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னையில் உள்ள வியார்பாடி வாழ் தமிழன் என்றார் .
 எனது குடும்பம் அங்கு உள்ளது நான் இங்கு இரண்டு நாட்கள் ஆயிற்று என்றார் பேச பேச இருவர் வந்து செருப்பு தைக்க கொடுத்து 100ரூபாய் சம்பாதித்தார் .
கொஞ்சம் குறைவாக தான் ஆட்கள்வருகிறார்கள் என்றார்.
அப்படி யே அவருடன் பேசி கொண்டு சில நேரங்களை பேசி கழித்தேன் .

வடக்கு நாதன் கோவில்  திருச்சூர் 

 

வரலாறு

ஆரியம்பா மற்றும் சிவகுரு என்ற இரு தம்பதியினருக்கு நீண்ட நாள் வரம் இருந்து வடக்கு நாதனிடன் தவமிருந்து ஆதி சங்கரராக பெற்ற பிள்ளை.
சிவன் இருவரின் கனவில் வந்து உங்களுக்கு இரு வரம் தருகிறேன் என்றாராம்
 • நீண்ட வாழ்வு சராசரியான அறிவு கூர்மை
 • குறைவான வாழ்வு அதிக மான கூர்மையான அறிவு
சிவ பெருமானிற்கு மணமுவந்து தொண்டை அற்ற தம்பதியினர்
குறைவான வாழ்க்கையும் மிக்க அறிவாற்றல் கொண்ட வரத்தை தேர்ந்தெடுத்தனர் .
இந்த வடக்குநாதன் கோவில் கட்டபட்டது முதலில் பரசுராமனுக்காக .
இத்திருக்கோவில் சிவனை முக்கியகடவுளாக வழிபடுகின்றனர் .
 இந்த ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சுமார் 8 ஏக்கர் நிலத்தில் அமைக்க பட்டு நான்கு புரமும் கோபுரமும் வாசலும் அமையப்பெற்றது . கோவிலை சுற்றிலும் கருங்கற்கலால் ஆன பிரம்மாண்டமான பாதுகாப்பு அரண் மிகுந்த சுவர்கள் .
ஆராய்ச்சி ஆய்வாளர்கள் அடிப்படையில் சிவனுக்காக கட்ட பட்ட கோவிலில் தென் இந்தியாவில் மிக பழமையான கோவிலும் மிக பெரிய கோவிலும் என்ற பெருமையை பெற்றது.
17 ஆம் நூற்றாண்டின் மகாபாரதத்தில் கூறப்பட்ட கேரளாவின் கலை மற்றும் கட்டிட வடிவங்களை ஒப்புகிறது .
முக்கிய தெய்வம்
ஶ்ரீ வடக்குநாதன், சிவா
மற்றதெய்வம்
ஶ்ரீ கிருஷ்ணன், ஶ்ரீ ஆதி சங்கர், ஶ்ரீ நந்தி கேஸ்வரா ஶ்ரீ ஐயப்பன்
வழிபாடு நேரங்கள் 
காலை :  3 மணி முதல் 11. 30  வரை
மாலை : 4.30 மணி முதல் 8.30 மணி வரை .
முக்கிய விழாக்கள்
சிவராத்திரி
திருச்சூர் பூரம்
போன்ற தினங்களில் கோவில் மிக பிரசித்தியுடனும் மக்கள் பக்தி மிகுந்து கொண்டாடுவார்கள் .
இக்கோவிலை சுற்றிநடந்தேன் .
கருமை நிறம் கொண்டு கம்பிரமாய் காலில் பெரிய இரும்பு சங்கிலி கொண்டுகட்டப்பட்ட நிலையில்
அங்கு யானை ஒன்று அழகாக நின்று பசுமையான இலைகளை  திண்று கொண்டிருந்தது .
 மக்களும் பலர் அங்கு இருந்தனர் சிலருக்கு உறக்கம் . பலர் சதுரங்கவிளையாட்டு பார்த்தும் ஆடிக்கொண்டும்  இருந்தனர் .
பொழுது போக்கும் கூட அறிவை கூர்மை படுத்த எண்ணி செயல் கொண்டு புரிதலால் தேர்ச்சி சதவீதம் அதிகமோ.
ஒரு வருடத்திற்கு குறைவான குழந்தைகளையும் மற்ற மதத்தினரையும் செல்ல அணுமதி மறுக்க படுகிறது.

காத்திருக்கும் போது ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார் அப்படியே இருவரும்பேசி திரையரங்கம் வந்து சீட்டு திரைபடத்திற்கு பயணச்சீட்டு  கொடுக்க வாங்கினோம். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து படம் பார்த்தோம்.   ஒரு மலையாள  படம் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது இது போதும் என்ற மகிழ்ச்சியுடன் பார்த்து விட்டு கிளம்பினேன்

நடந்து ரயில்நிலையம் சென்று பாலக்காட்டிற்கு பயணச்சீட்டு வாங்கிணோம்.
ரோட்டில்உள்ள தள்ளுவண்டி கடையில் நான் மூன்றுதோசையும் ஒரு கலக்கியும் தின்னேன் .
ரயில் அறை மணி நேரம் தாமதமாக வந்தது .
ரயில்நிலையத்தில் தங்க அறைகளின் வாடகை பற்றி விசாரித்தேன்
குளிர்சாதன அறைகள் 465  12 மணி நேரத்திற்கு சாதரணமாக படுக்கையுடன் கூடிய அறைகள் 165 ரூபாய் 12மணி நேரத்திற்கு என கூறினார்
எனக்கு 8 மணிக்கு ரயில் காத்திருந்து ஏறி பாலக்காட்டிற்கு வந்து இறங்கினால் வருண பகவான் நீர் நிலை நிரம்ப செய்ய வான் மழை பெய்ய வைக்கிறார்.
மழையையும் இரவு நேர பயணத்தை அழகாக ரசித்து கொண்டே உறங்கி னேன் என் நண்பன் மீது உரிமை கொண்டு .
இரவில் தூக்கம் சிறிது நேரத்திற்கு பின் வரவில்லை . ரயில் நிலையத்தில் நடந்து கொண்டு இருந்தேன் அதிகாலை 12 முதல்  4 மணி வரை
2 வது நடைமேடையில் நின்று கொண்டு இருந்தது திருச்செந்தூர் பாலக்காடு பயணிகள் வண்டி
. வண்டியில் ஏறினோம் பெட்டியில் வெறும் 30 பயணிகள் அதுவும் நாங்கள் இரண்டு பேர்கள் மற்றும் ஒரு இஸ்லாமிய மலையாள குடும்பம்.
சன்னல் ஓரம் உட்கார்ந்து நிலை அல்ல படுத்து கொண்டு சன்னல்
வழி நிலாவை கண்டு ரசித்த படி சரியாக 4 மணிக்கு ரயில் மேதுவாக நகர்ந்து  பயணம் தொடர்ந்தது உடுமலையை நோக்கி .
அறைக்கண் பார்வையில் படம் பிடிக்க கொல்லங்கோடு,ஆனைமலை ரோடு கடந்து விழித்தேன் பொள்ளாச்சியில்
சன்னல் கம்பிகள் மூன்று கூறியது என்னிடம் நல்ல மழை பெய்தது இன்று இரவு என்றும் பெய்து கொண்டிருப்பது சாரலுடன் கூடிய தூரல்கள் அதில் சில சோட்டுக்களாக என் கண் முன்னே இடம் கோமங்கலம் புதூர் .
Tags: , , , ,

Related Article

No Related Article

Follow us

Newsletter

Most Viewed Posts

Archives