1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 10. மார்கழி குளிர்
 11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 29. மகா கவி பாரதியார்
 30. அமராவதி அணை
 31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 32. உடுமலை நாராயணன் கவி
 33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 35. உடுமலைப்பேட்டை வரலாறு
 36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 38. கிராமத்து திண்ணை பேச்சு
 39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Tuesday, March 26, 2019
 1. முனியத்தாள் கோவில் திருவிழா கிடாய் வெட்டு முதல் பூவோடு எடுத்தல் வரை பொள்ளாச்சி
 2. மஹா சிவராத்திரி உருவான வரலாறு மற்றும் வழிபட வேண்டிய முறை
 3. குடியரசு தினம் உருவாகிய வரலாறு
 4. மாமன்னர் திருமலை நாயக்கரது சரித்திர நாவல்
 5. பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
 6. தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
 7. பாலக்காடு வடக்கந்தரை திருப்புரைக்கல் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா
 8. இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை
 9. 1800 அடி மேற்கு தொடர்ச்சி மலை சாகச பயணம்
 10. மார்கழி குளிர்
 11. வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்
 12. மலை ஏறுதல் எதற்கு அறியுங்கள் பயன்களை
 13. பொள்ளாச்சி சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாறு
 14. மறையூர் சுற்றுலா தளம் ,கேரளா
 15. உடுமலையில் ஏழுமலைகளை கடந்து பெருமாளை காண
 16. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 17. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 18. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 19. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 20. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 21. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 22. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 23. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 24. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 25. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 26. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 27. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 28. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 29. மகா கவி பாரதியார்
 30. அமராவதி அணை
 31. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 32. உடுமலை நாராயணன் கவி
 33. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 34. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 35. உடுமலைப்பேட்டை வரலாறு
 36. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 37. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 38. கிராமத்து திண்ணை பேச்சு
 39. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 40. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,

உடுமலை நாராயண கவி
செப்டம்பர் 25, 1899- மே23,1981.
தமிழ் திரை பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் ஆவார் விடுதலை போராட்டத்தின் போது தேச உணர்வு மிக்க பாடல்கள் எழுதியுள்ளார். முத்துச்சாமிக்கவிராயரின் மாணவர் இவருடைய பாட்டுக்கள் நாட்டுப்புற இயலின் இலக்கிய செழுமையையும் கொண்டிருந்தது. 1933 ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கு பாடல் எழுதினார். இயல்பாகவே நாரயணகவி இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், மன உறுதியும் கொண்டவர். மகாகவி பாரதியாரின் நட்புக்கு பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சீர்திருத்த கருத்துகளை எழுதியுள்ளார். கலைவாணர் , என்.எஸ் கிருஷ்ணன்’கிந்தனார் ‘ காதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கிய அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி,ஓர் இரவு,நல்லதம்பி. போன்ற படங்களுக்கும் மு.கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா,திரைபடங்களுக்கும் பரபாவதி,காவேரி, சொர்க்கவாசல்,தூக்குதூக்கி,தெய்வபிறவி,மாங்கல்யபாக்கியம்,சித்தி,எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தகண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ்,போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியவர். ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்கள் எழுதியுள்ளார்.

இளமை

1899ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்தில் உள்ள பூவிளையாடி என்னும் பூளைவாடி சிற்றூரில் 24 தெலுங்கு செட்டியார் இனத்தைச்சேர்ந்த கிருஷ்ணச்சாமி-முத்தம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தார். நாரயணசாமி என்னும் தன் பெயரை நாரயணகவி என கவிஞருக்கு ஒரு அடையாளமாக காட்டினார்.
இளம்வயதிலேயே தம் தாய் தந்தையை இழந்து வருமையில் உழன்றார். தம் தமயனார் தனுஷ்க்கோடியின் அருகில் வளர்ந்தார். அவர் தீப்பெட்டிகளை விற்று ஊர் ஊராக சென்று விற்றார். நான்காம்வகுப்புடன் தமது பள்ளி படிப்பை முடித்து கொண்டார். நாரயணசாமி-கிராமியகலைகளான புரவியாட்டம், தம்பாட்டம், சிக்குமேளம், உடுக்கடிப்பாட்டு,ஒயில்க்கும்மி, கொங்கு மண்ணின் கலைகளில் ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். இதுவே நாடகத்தில் பங்கேற்க வழிகாட்டியாக அமைந்தது.

நாடகத்தில் ஈடுபாடும் முத்துக்குமாரசுவாமிகளை சந்தித்லும்:

பூளைவாடி சிற்றூரில் வருடாவருடம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நாடகம் அரங்கேறும். அந்நாடகத்தில் நாரயணகவி இலக்குவன் வேடத்தில் நடித்திருந்தார்.புகழ் பெற்ற சிறந்த சங்கரதாஸ்சுவாமிகளுக்கு நெருங்கிய நண்பர் ஆனார். உடுமலை சரபம் முத்துக்குமாரசுவாமி கவிராயர் ஆரிய கானசபா என்னும் நாடக மன்றத்தின் ஆசிரியராக இருந்தார்.
அவர் ஒருமுறை பூளைவாடியில் நடைப்பெறும் நாடகத்தை பார்க்க வந்தார். அப்போது நாரயணகவி யின் திறமையை பார்த்து முத்துக்குமாரசுவாமி நாராயணகவியை அவருடன் அழைத்துச்சென்றார்.12-25 வயதுவரை நாரயணகவியை அவருடன் வைத்துக்கொண்டார். நாரயணகவி முத்துக்குமாரசுவாமியுடன் இருந்தபோது பல நுட்பங்களை கற்றுக்கொண்டார். 25ஆம் வயதில் தமது ஊருக்கு திரும்பினார். ஒரு கதர்கடையை திறந்தார். கதர் பாடலை பாடி ஊர் ஊராக சென்று கதர் விற்றார். அப்போது பேச்சியம்மாள் என்பவரை மணந்துகொண்டார். நான்கு ஆண் குழந்தை பிறந்தனர். வாணிகத்தில் நஷ்டத்தால் கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டது. கடனை. அடைத்தபிறகுதான் ஊருக்குள் நுழைவேன் என சூளைரை எடுத்துகொண்டார்.கையில் நூறு ரூபாய் யோடு ஊரை விட்டு புறப்பட்டார்.கடைசியாக மதுரை சங்கரதாஸ் சுவாமிகளை சென்றடைந்தார்.முறையாக யாப்பிலக்கணம் முழுவதும் ஐயந்திறிபறக்கற்றுணர்ந்தார்.

தேச ஊணர்ச்சி பாடல்கள்

மதுரை நாடக மன்றங்களில் பாடல்களும், கருத்துகளும் எழுதினார். விடுதலை போரில் சுதந்திர வேள்வித்தீ வெடித்து. விடுதலை போரில் தமது பங்கிற்காக தேசபக்தி பாடல்களை பாடினார்.

சொந்த மண்னை அடைதல்

மதுரையில் வாழ்ந்த போது இவரின் கலைத்திறனை பாராட்டி 1000 ரூபாய் பரிசாக வழங்கினர். 1000 ரூபாய்க்கு புத்தகங்களாக வாங்கினார். வீட்டில் இருக்கும் கடன் ஞாபகத்திற்கு வரவே பணமீட்டினார். ஈட்டிய பணத்துடன் ஊருக்கு சென்று ஊருக்கு புறத்தே அணைத்து கடன்களையும் அடைத்த பிறகே ஊருக்குள் நுழைந்தார்.

திராவிட இயக்க கவிஞர்களோடு தொடர்பு

மதுரையில் வாழ்ந்த போது டி.கே.எஸ் என்னும் நாடக குழுவினரை சந்த்தார். கலைவாணர் தொடர்பால் பெரியார், அண்ணா,கலைஞர்,பாவேந்தர் முதலியோரிடம் நெருங்கி பழகினார். அதனால் திராவிட இயக்கப்பற்றும் பகுத்தறிவு பார்வையும் கவிக்கு கிடைத்தன.

திரையுலகில் நுழைதல்

கிராமபோன் கம்பெனியில் பாடுவதற்காக இயக்குனர் ஏ.நாரயணன் சென்னைக்கு அழைதார். அப்போதுதான் அவர் திரையுலகில் பாட நுழைந்தார். இவர் எழுதிய முதல் கவிதை சந்திர மோகனா அல்லது சமூகதொண்டு ஆகும். அப்போது சிறந்து விளங்கிய பாபநாசம் சிவனைவிட இவரே அதிகமாக பாடல்களை பெறுவதற்காக தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தனர். இவர் உழைப்பாளர்களுக்கும் பாடல்களை எழுதியுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் இவருக்கு பின்னால்தான்.

இயற்றிய சில பாடல்கள்

கா….கா…கா…6(பராசக்தி)
அந்தகாலம்(நல்லதம்பி,1949,பாடியவர்:என்.எஸ் கிருஷ்ணன்)
1954ஆம் ஆண்டடில் ரத்தகண்ணீர் படத்தில் இவர் எழுதிய”குற்றம் புரிந்தவன் வாழ்கையில் நிம்மதி கொள்வதென்பதுதேது?”
நல்ல,நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கனும் விவசாயி, 1967.
1956 ‘மதுரைவீரன்’_ சும்மா இருந்தா சொத்துக்கு நட்டம்,சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்.

பாடல் இயற்றிய திரைப்படம்

வேலைக்காரன்,ஓர்இரவு,ராஜகுமாரி,நல்லதம்பி,பராசக்தி, மனோகரா,பிரபாவதி,எங்கள் வீட்டு மகாலட்சுமி,காவேரி,சொர்கவாசல்,தூக்குதூக்கி,தெய்வப்பிறவி,சித்தி,மாங்கல்யபாக்கியம்,ரத்தகண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் .

சிறப்புகள்

இவரது கவிதிறமையை பாராட்டி கலைமாமணி விருது கொடுத்தார்கள். இவர் 82 வயதில். இறந்துவிட்டார்.அதற்கு பிறகு31.12.2008 அன்று இந்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது. இவரின் ஞாபகமாக திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாரயணகவி மணிமண்டம் அமைந்துள்ளது. அங்கு. நாரயணகவியின் மார்பளவு சிலையும் உள்ளது. இவரது புகைப்படங்களும் கண்காட்சிக்கா வைக்கப்பட்டுள்ளது.இவர் இவ்வுளகை விட்டு பிறிந்தாலும் நம் அனைவரின்மனதை விட்டு நீங்கவில்லை. உடுமலையில் பிறந்த கவிஞர் , நமக்கெல்லாம் பெருமைதானே.

-முனைவர் க இந்திரசித்து

 

உடுமலை நாராயணகவி !

நீ

பேருக்கு வாழந்தவன் அல்லன் :

ஊருக்குப் பேர்தந்தவன்

உலகத்தின் உச்சியில்

உடுமலையின் பெயரை

உச்சரிக்க வைத்தவன்

இமயத்தின் உயரத்தில்

உடுமலையின் இதயத்தை

உயர்த்தி வைத்தவன்

நாத்திக மருந்து ஏந்திவந்த

மருத்துவன் நீ !

ஆனால் அந்த ஆத்திக

நஞ்சு அருந்தி வந்த

அயலவர்கள் உன்னை

அவமதித்தார்கள் .

பகுத்தறிவுச் சோலையில்

பாட்டியசைத்து

அறிவியல் கடலில் துடிப்பசைத்து

திரை வானத்தில்

தீந்தமிழால் நீந்தி வந்தவன் நீ !

காசிக்கும் ஊசிக்கும்

இணைப்பு ஏற்படுத்திய

இலக்கிய நயம்

இன்னும் கூட இதயத்தில்

சிலிர்ப்பேறபடுத்துகிறது.

குரங்கிலிருந்து பிறந்த குரங்கை

மறுபடியும் மனிதனாக்கிய

உன்

பாட்டுப்பாடி மலர்ச்சிக கொள்கையை

பாராட்டி மகிழ்கின்றேன்
****************
நாளை…

பகுத்தறிவுப் பாவலர்…
உடுமலை நாராயணகவி
119ஆம் பிறந்த நாள் விழா..

தி.ஆ.2048,
மடங்கல் (ஆவணி) : 09

25.09.2017 திங்கள்

காலை 9மணி..

உடுமலை நாராயணகவி நினைவு மணிமண்டகம்,
உடுமலைப்பேட்டை…..
?????????

Tags: , ,

Related Article

No Related Article

Follow us

Newsletter

Archives