வரலாறு:
பூர்ண சுவராஜ் என்ற விடுதலை இயக்கம் இந்திய விடுதலை இயக்கத்தினரால் அறிவிக்கப்பட்டது. வரலாற்றில் அன்று 1930 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் நாள் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் நாள் ஒரு மகாசாசனம் உருவாக்குவதற்காக ஒரு குழு உருவாக்கி அதன் தலைவராக பி.ஆர் அம்பெத்கர் நியமிக்கப்பட்டார்.
அரசியலமைப்பு ஏற்பதற்கு முன்னதாக பல விவாதங்கள் மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டன. இறுதியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரின் ஒப்புதலுடன் நிரந்தர அரசியல் சாசனம் கையெழுத்திடப்பட்டது.
அதற்கு பிறகு இரண்டு நாட்கள் கழித்து, அன்று காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான சனவரி 26 ஆம் நாள், மக்களாட்சி பூத்த நாளாகக கொண்டாட நேரு அமைச்சரவை அறிவித்தது.
குடியரசு தினத்தன்று இந்தியா:
நாட்டின் முக்கியமான மூன்று விடுமுறை நாள்களுள் இதுவும் ஒன்று. இந்தமுறை நாட்டின் தலைநகர் தில்லியில் இந்திய பிரதமர் அமஜ்வான்ஜோதியில் வீரவணக்கம் செழுத்தினார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் கொடியேற்றினார்.
இது 70 ஆவது குடியரசு தினம்.ராஜ்பாத்தில் பல விதமான கலாச்சாரத்தைப் பற்றி அணிவகுப்பு நடைப்பெற்றது. ராணுவம்,இந்திய விமானப்படை முதலியவற்றின் அணிவகுப்பு நடைப்பெற்றது.
தமிழ்நாட்டில் கொண்டாடும்முறை:
தமிழ்நாட்டில் கவர்னர் கொடியேற்றுவார். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும்,ஒவ்வொரு குடியரசு தினத்தன்று கவர்னரும் கொடியேற்றுவார். சிறந்த காவலருக்கு பதக்கங்களும்,விருதுகளும் வழங்கப்படுகின்றன. துறை வாரியாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு பெரும். இந்த முறை காமராஜர் சாலை,சென்னையில் மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைப்பெற்றன.
சிறப்பு விருந்தினர்:
2019ல் தென்னாப்பரிக்க அதிபர் ராம்கோசே இந்தமுறை சிறப்பு விருந்தினராக இரண்டு நாட்களுக்கு முன்னரே வந்துவிட்டார்.