1. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 2. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 3. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 4. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 5. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 6. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 7. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 8. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 9. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 10. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 11. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 12. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 13. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 14. மகா கவி பாரதியார்
 15. அமராவதி அணை
 16. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 17. உடுமலை நாராயணன் கவி
 18. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 19. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 20. உடுமலைப்பேட்டை வரலாறு
 21. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 22. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 23. கிராமத்து திண்ணை பேச்சு
 24. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 25. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,
Sunday, November 18, 2018
 1. வடக்குநாதன் திருக்கோவில் வரலாறு , திருச்சூர்
 2. கிழக்கில் இருந்து பொள்ளாச்சி போகும் ரயில்
 3. அணைக்கு ஆர்ப்பரிக்கும் காண்டூர் கால்வாய் நீர்
 4. இயற்கையுடன் என்னுடைய செலவுகள்
 5. கேரளாவில் தொடுபுழாவிற்கு பேருந்தில் என் ஜன்னல் ஓரம்
 6. காளைகள் சீறி பாயும் ரேக்களா ரேஸ் பந்தயம் , பள்ளபாளையம்
 7. பள்ளியின் முதல் நாள் ஒரு தந்தையின் பரிதவிப்பு
 8. உடுமலை தேவர் ஆட்டமும் வரலாற்றுத்திருவிழாவும்
 9. உழைப்பை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் தேனிக்களும் அதன் ராணி தேனியிடம்
 10. மனுப்பட்டி அருகே , மலை ஏறுதல்,
 11. மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
 12. பாரம்பரியம் பண்பாடு காக்கும் கெண்டேரியம்மன் திருவிழா
 13. ஆல்கொண்டமால் கோவில் பெதப்பம்பட்டி
 14. மகா கவி பாரதியார்
 15. அமராவதி அணை
 16. உடுமலைப்பேட்டையின் முக்கியமான சுற்றுலா தலங்கள்
 17. உடுமலை நாராயணன் கவி
 18. என் குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்து
 19. திருமூர்த்திமலையில் நீங்கள் காண வேண்டிய இடங்கள்
 20. உடுமலைப்பேட்டை வரலாறு
 21. தளி எத்தலப்ப நாயக்கர் வரலாறு
 22. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 23. கிராமத்து திண்ணை பேச்சு
 24. வேம்பு சதுக்கமும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியும் நம் நினைவுகளில்
 25. ஆடி-18 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், ஊஞ்சல்,

 உடுமலையில் உள்ள ஶ்ரீ மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக மக்கள் வழிபாடும் பழமையான ஆண்மிக வழிபாட்டு தளம்.

உடுமலையை சுற்றி உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்றாக இணைந்து வழிபட்டு கொண்டாடும் ஒரே திருக்கோயில் என்ற ஒரு பெருமை இத்திருக்கோவிலிற்கு உண்டு.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இரு கண்கள் போதாது அந்த அகிலத்தினை ஆட்சி செய்யும் மாரியம்மனை தரிசிக்கவும் அவளின் சக்தியை காணவரும் பக்தர்களை காணவும்.

மாரியம்மன் தேரில் பக்தர்களை காண வரும் போது ஆள்ளி கொடுப்பால் அதிக அளவில் மாரியை மக்களுக்கு. என் தாய் என்னை பட்டினியால் இட மாட்டாள் என்பதற்கு இது சான்று என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் பல விவரங்களை அறிய.

எனது  சிறுவயதில் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நினனவுகள்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை மற்றும் பொங்கல் விழாவை விட மிகுந்த ஆர்வம் காட்டிய விழா என்றால் அது மாரியம்மன் கோவில் திருவிழா.

அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பள்ளியில் படிக்கும் போது மற்ற நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்வோம் கடைகளையும் , விளையாட்டு பொம்மைகளை பற்றியும் குறிப்பாக ராட்டினங்கள் செயல்படும் இடங்களும் அதன் ஆட்டத்திற்கான விலைகளும்.
குறிப்பிட்ட சில ஆண்டு ராட்டினங்களின் இடங்கள் மாறுவதும் சில ராட்டினங்களின் வருகையும் இல்லாமலும் போனது.

 இது போன்ற விஷயங்களை பற்றி பள்ளியில் நண்பர்கள் அனைவரும் விமர்சனம் செய்து கொண்டு இருப்போம் முழு ஆண்டு தேர்வு வருவதையும் கூட கண்டு கொள்ளமால்.

ராட்டினங்களின் உரிமையாளர் கூட சரியாக பொருத்து கிறார்களா என்று பார்க்கமாட்டார்கள் ஆனால் நானும் எனது அனைத்து மத நண்பர்களும் குட்டைக்கு தூரிகள் லாரியில் வந்து இறங்கிய உடன் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோம் எப்போதும் முடிப்பார்கள் என்பதற்காகவும்.

மாரியம்மன்  கோவில்  திருவிழா கால அட்டவனை

ஊர் திருவிழா தொடங்க ஆரம்பித்தவுடன் தினமும் காலையில்  விமர்சனம் பள்ளியில் ,இரவு குட்டையில் நடக்கும் நிகழ்ச்சி மற்றும் உணவு வகைகளை பற்றியும்.

இரவு நிகழ்ச்சியையும் குட்டை திடலையும் வேடிக்கை பார்க்க வந்தால் டெல்லி அப்பளமும் மாங்காயும் தான் எனக்கு விருப்ப மண ஒன்று.

ஓவ்வொரு நாளும் உடுமலையையே ஆளும் மாரியம்மன் ஒவ்வொரு சமூகத்தினர் சார்பாக வீதி உலா வரவாள்.
மாவிளக்கு பூஜை ஒவ்வொரு சமூகத்தினர் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நேரமும் செல்வார்கள் என் அம்மாவுடன் சென்ற வந்தது நினைவிற்கு வருகிறது.

மேலும் சிறிய வருத்தம் மாவிளக்கு முடிந்தால் திருவிழா முடிவிற்கு வரும் என்பது.

மாரியம்மன் திருவிழா தீர்த்தம் 

மாரியம்மன் தேர் திருவிழா என்றாலே உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ..கொண்டாட்டம் …தேர் விழா பள்ளி தேர்வுகள் வரும்பொழுது வருவதால் ..குழந்தைகளுக்கு அதிக கவனம் ..கொஞ்சம் கொண்டாட்டம் ..கல்லூரி இளையசொந்தங்களுக்கு கேட்கவேண்டாம் ..எப்பொழுதும் கொண்டாட்டம் தான் ..

இன்று பங்குனி உத்திரம் பொன் நாள் …அதிகாலை அம்மாவுடன் மாரியம்மன் கோவிலில் இருக்கும் கம்பத்துக்கு வீட்டிலிருந்து வேப்பம் தழைகள் குடத்துடன் மாரியம்மன் அருளை எல்லா மக்களும் நலம் வேண்டி பிராத்தனை செய்வது கோடி புண்ணியம் ..30 வருடங்களுக்கு பின் அம்மாவுடன் சென்று வருவது ஆனந்தம் ..ஆனந்தம் …..அமைதியான தளிசாலையில் நடந்து வந்து முதலில் இரண்டு ஏசு புனித ஆலயம் ஜெபத்தை காதில் கேட்டுக்கொண்டும் ,இறை அல்லாவின் அதிகாலை பாங்கை காதில் இன்புற கேட்டுக்கொண்டு கடந்து வருவது மனதிற்கு புத்துணர்ச்சி ….நூலகம் அருகில் இருக்கும் பிள்ளையாரை சுற்றி வரும்போது மனதிற்கு ஒரு இனம்புரியாத தெய்வ பக்தி மனதில் தொற்றி கொள்கிறது

மகிழ்ச்சியுடன் உடுமலை காவல்நிலையம் நிலையத்தை கடந்து பெரியகடைவீதியில் இரண்டு பக்கம் முன்னிரவு சிறு கடை உழைப்பாளர்கள் உழைத்த களைப்பில் அயர்ந்து உறங்கி கொண்டிருக்கும் அழகு பார்க்கும் போது நம் மனதுக்கு கடின உழைப்பு வீண்போகாது என்பதை உணர்த்துகிறது..

கோவிலின் படியேறும்போதே அதிகாலை கூட்டம் அமைதியாக…மனதில் எத்தனையோ பிராத்தனைகளை வேண்டி ..போன்வருடம் பிராத்தனைகள் நிறைவேறி அம்மனுக்கு அங்கபிரதச்சனம் செய்து வழிபாடும் அழகு பிராத்தனைகள் வீண்போகவில்லை அவர்களுக்கு ..கோவிலின் முதல் அடி எடுத்து வைக்கும் போது நம் முகத்துவாரம் முழுவதும் வேப்பம் தழைகள் ,அதன் சிறிய வெள்ளை வேப்பம் பூக்களின் வாசம் ..நம் உடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது ..

நம் பெரியோர்கள் நமக்கு அளித்த இயற்கை வைத்தியம்…கோவிலின் தரையில் தடம் பதித்து நடக்கும் பொழுது அந்த வேப்பம் தழைகளுடன் இருக்கும் நீரின் ஈரம் உடல் மற்றும் ,காலின் வெப்பத்தை தணிக்கிறது ..

அதுவும் அதிகாலை வேலையில் எழுந்து பெற்றோர்களுடன் வந்திருக்கும் குழந்தை செல்வங்கள் ஆரவாரமாக ..ஈரத்துடன் நனைந்து அருள் வேண்டி கொண்டிக்கொண்டிருக்கும் அழகோ அழகு ….அம்மா கொண்டு வந்த தீர்த்தநீரை கம்பத்துக்கு ஊற்றும் போது தெறிக்கும் நீர்த்துளிகள் நம் உடம்பில் ..

முகத்தில் படும்பொழுது முகத்தில் இருக்கும் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெறுவது அப்படி ஒரு ஆனந்தம் ..பொது தரிசன வரிசையில்.கொஞ்ச நேரம் மெதுவாக அடி மேல் அடி வைத்து மாரியம்மனை பிராத்தனை செய்தது மிக்க மகிழ்ச்சி …கோவிலின் பெரிய ஆலமர தெய்வங்களை சுற்றி வரும்பொழுது ஆலமர காற்றை அதிகாலைவேளையில் சுவாசிப்பது நமது நுரையீரலை சுத்திகரிக்கிறது .

இவை அனைத்தும் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்கள் விடாமல் கற்றுக்கொள்ளவேண்டியது இன்றியமையாதது ..

மெதுவாக ஈரம் கலந்த தரையில் சில மணித்துளிகள் அமர்ந்து எழுவது ஊடலுக்கு ஆரோக்கியம். அதிகாலை வழிபாடுகள் என்றும் மனதில் ஒரு உற்சாகத்தை நாள் முழுவதும் வைத்துக்கொள்ள உதவுகிறது .

.உடுமலை மாரியம்மன் தேர் திருவிழா மாலை நேர கொண்டாட்டங்களுடன் சந்திப்போம்

பூவோடு எடுப்பதன் அர்த்தம்

அக்னி சட்டியில் தீ ஒன்று கண்டேன் .
சத்யத்தயின் துணையோடு கடக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் அது.
தங்க மஞ்சள் போல ஒளிவிடுகிறது அக்கினிச் சட்டி.
கோவில் திருவிழாக்களில்..அக்னி சட்டி எடுப்பதன் அர்த்தம் ..


இறைவா எதுவரை இந்த மண் சட்டி என்ற உடலில் வசிக்கின்றேனோ அதுவரை ஆன்ம தீபத்தை ஏற்றிக்கொண்டே இருப்பேன்..
எவ்வளவு நெருப்பு சுடும் அளவு இன்னல்கள் வந்தாலும் உன் வழியிலிருந்து மாறாமல் தாங்கிகொள்வேன்..

என் ஆன்ம தீபம் நிலையாய் எரிவதற்கு ஞானம் என்ற நெய்யை உன்னிடம் வந்தடையும் வரை ஊற்றிக்கொண்டே இருப்பேன்..
இதுவே அக்னி சட்டியின் ரகசியம்..!!!!!!!

தேர்திருவிழா கொண்டாட்டம் :

உடுமலையே கலைகட்டும் இது போன்ற எந்த திருவிழாவிற்கும் இல்லாத சிறப்பு உடுமலை மாரியம்மன் கோவில தேர்திருவிழாவிற்கு உண்டு.

பல விளம்பர பலகைகள், உள்ளூர் தொலைக்காட்சிகளில் சிறு கடைகளின் விளம்பரங்கள்

Udumalai Mariamman temple official website

பூவோடு எடுப்பதன் அர்த்தம்

அக்னி சட்டியில்

தீ ஒன்று கண்டேன் .
சத்யத்தயின் துணையோடு கடக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் அது.
தங்க மஞ்சள் போல ஒளிவிடுகிறது அக்கினிச் சட்டி.
கோவில் திருவிழாக்களில்..அக்னி சட்டி எடுப்பதன் அர்த்தம் ..
இறைவா எதுவரை இந்த மண் சட்டி என்ற உடலில் வசிக்கின்றேனோ அதுவரை ஆன்ம தீபத்தை ஏற்றிக்கொண்டே இருப்பேன்..
எவ்வளவு நெருப்பு சுடும் அளவு இன்னல்கள் வந்தாலும் உன் வழியிலிருந்து மாறாமல் தாங்கிகொள்வேன்..

என் ஆன்ம தீபம் நிலையாய் எரிவதற்கு ஞானம் என்ற நெய்யை உன்னிடம் வந்தடையும் வரை ஊற்றிக்கொண்டே இருப்பேன்..
இதுவே அக்னி சட்டியின் ரகசியம்..!!!!!!!

Udumalai mariamman temple time table festival

Udumalai mariamman temple festival time table

Advertisements
Tags: , ,

Related Article

3 Comments

Selvameena February 7, 2018 at 7:35 am

When 2018 தேர் திருவிழா ?..

Shiva February 8, 2018 at 5:54 am

Nice thanks for sharing

ManiK March 23, 2018 at 8:46 am

Nice!…. and I remember my memories ….

Leave a Comment

Ads

Ads

img advertisement

Archives